வட கிழக்கில் NPP-JVP கட்சியை ஏன் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ? அறிந்து கொள்ளுங்கள் தமிழர்களே !

 


இலங்கையில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தென் இலங்கையில் அனுரா ஜனாதிபதி ஆகியதால் அவரை ஆதரிக்கவேண்டும் என்று, சில தமிழர்கள் தமிழர் தாயகப் பகுதியில் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, மெல்ல மெல்ல தமிழர்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறார்கள்.

புதுமை வேண்டும், புதியவர்கள் வேண்டும், இளைஞர்கள் வரவேண்டும் என்று கூறும் இவர்கள் இறுதியாக கூறுவது, JVP மற்றும் அதன் கூட்டமைப்பான NPP கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று. 

13வது திருத்தச் சட்டம், இதனை ரணில் அரசானது அமுலாக்க முற்பட்டவேளை, இந்த JVP கட்சியே நீதிமன்றம் சென்று தடை உத்தரவை வாங்கியது. ஏன் ? தமிழர்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்த JVP கட்சி மிகவும் தெளிவாக இருந்துள்ளது. இவ்வாறு தமிழர்களின் அதிகாரங்களை தட்டிப் பறிக்கும் JVP கட்சி அதன் பங்காளிக் கட்சியான NPPக்கு தமிழர்கள் எப்படி வாக்குகளைப் போடுவது ? 

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்களே தமிழர்களை ஆளவேண்டும். இதுவரை பெரும்பாண்மை இனம் எங்களை ஆட்சி செய்தது எல்லாம் போதும். எனவே வட கிழக்கில் சரியான நபர்களை தெரிவு செய்து தமிழர்கள் வாக்குகளைப் போடுவது நல்லது.

Post a Comment

Previous Post Next Post